பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம்

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம் அலவாய் ஆலயம் கொங்குப் பகுதியில் நாமக்கல் பக்கம் அமைந்திருக்கின்றது. இந்த ஆலயம், ராசிபுரத்துக்கும் வெண்ணந்தூருக்கும் இடையில் இருக்கும் மலையின் தலமிது, இதனைச் சுற்றியே சென்னிமலை முதல் பல முருகப்பெருமான் தலங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த அலவாய் தலம். இதன் வரலாறு கொங்கண முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, பொதிகை மலை பக்கம் அகத்தியர் போல் கொங்கு நாட்டு பக்கம் பிரசித்தியானவர் கொங்கண […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம். வேலூர் அருகில் உள்ள கே.வி குப்பம் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். சிறிய குன்றின் மேல் மாயல் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். இது பழங்காலத்தில் இருந்தே உண்டு எனினும் மீளக் கட்டப்பட்டது சமீபத்திய காலங்களிலே. அங்கு நாகராஜ் சித்தர் என்பவர் இருந்தார். முருகபெருமானின் சீடரான அவர் திருத்தணி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்று முருகனை வழிபட்டு வந்தார், அவர் கனவில் தோன்றிய […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம். சென்னை வானகரத்தில் அமைந்திருக்கின்றது மச்சக்கார முருகன் ஆலயம், போரூர் தொழில்பேட்டைக்கு அருகில் வானகர மேட்டுப்பக்கம் இது அமைந்திருக்கின்றது. இந்த ஆலயத்தின் துவக்கம் முருகப்பெருமானின் அவதார காலத்தில், அதாவது வள்ளி திருமணத்தில் இருந்து துவங்குகின்றது. வள்ளியினைத் திருமணம் செய்ய வந்த முருகன் அவள்மேல் காதல் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் முதியவர் வேடத்தில் வருவான், வேடன் வேடத்தில் வருவான், இன்னும் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம். தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானதும் சென்னையின் மிக முக்கிய அடையாளத்தில் ஒன்றுமானது வடபழனி முருகப்பெருமான் ஆலயம், 18 ஆம் நூற்றாண்டில் ஒரு ஓலை கொட்டைகையில் துவங்கப்பட்ட இவ்வாலயம் இப்போது ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக வளர்ந்திருப்பதெல்லாம் முருகனின் தனி அருள். இந்த ஆலயத்தின் தலவரலாறு அண்ணாசாமி நாயக்கர் என்பவரிடம் இருந்து துவங்குகின்றது, அது 18 ஆம் நூற்றாண்டின் காலங்கள். இப்போது இருக்கும் சென்னை அப்போது இல்லை, மெட்ராஸ் என்பது கடற்கரை கோட்டை […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம். முதலாவது ஆலயமான முருகன் குன்றம் ஆலயம் கன்னியாகுமரியின் நுழைவாயிலில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இந்த ஆலய வரலாறு மகா தொன்மையானது. வரலாற்றின் அடிப்படையில் ஆழமானது. அதாவது, இந்தப் பகுதிகள் சேரநாட்டின் தென்கிழக்கு எல்லையாய் இருந்த பகுதிகள். சேர நட்டின் கிழக்கு எல்லை மிகப்பெரிய மலைகளால் ஆனது என்பதால் இந்தப் பிரதேசம் மட்டும் சிறிய பகுதி மட்டும்கொஞ்சம் காவல் செய்யப்பட வேண்டிய பகுதி என்பதால் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம். பாரத தென்முனை எக்காலமும் தவம் செய்ய ஏதுவான இடம், இதனை அன்னை தேவி கன்னியாகுமரியில் வந்து அமர்ந்து சொன்னாள், இன்னும் பல அவதாரங்கள் அதை உறுதிப்படுத்தின. அந்தத் தென்முனை எப்போதும் சூட்சுமான சித்தர்களைக் கொண்டிருந்தது, அந்தச் சித்தர்களின் தலைவனாக கடவுளாக அந்த முருகப்பெருமான் வீற்றிருந்தார். அவர் இருந்ததாலே அகத்தியர், விசுவாமித்திரர், கௌதமர் என எல்லா ஞானியரும் தென் பக்கம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்கள், ஞானம் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : தென்பழனி முருகன் மற்றும் வவ்வால் குகை முருகன் ஆலயம் ஆரல்வாய் மொழி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தென்பழனி முருகன் மற்றும் வவ்வால் குகை முருகன் ஆலயம் ஆரல்வாய் மொழி. மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலை மட்டும் அகத்திய தலைமையில் சித்தர்கள் குவிந்த இடம் அல்ல, அவர்கள் அந்த நீண்ட மலை முழுக்க பயணித்தார்கள், அபூர்வ மூலிகைகள் தேடி, பிரபஞ்சத்தின் நல்ல அதிர்வுகளைத் தரும் இடம் தேடி தேடி அலைந்தார்கள், தாங்கள் இருக்குமிடமெல்லாம் முருகப்பெருமனையும் வணங்கினார்கள். பின்னாளில் அவர்கள் சமாதியானாலும் அவர்கள் உருவாக்கிய முருகப்பெருமான் ஆலயங்கள் அந்த மலைமுழுக்க நிலைபெற்றன. […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மேலக்கொடுமலூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மேலக்கொடுமலூர் முருகப்பெருமான் ஆலயம். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ள ஆலயம் இந்த மேலக்கொடுமலூர் ஆலயம், முருகப்பெருமானின் மகா தொன்மையான ஆலயங்களில் இதுவும் ஒன்று, மிக மிக விசேஷமானதாக இங்கு அமைந்திருப்பது முருகப்பெருமானின் சுயம்பு வடிவம். ஆம், முருகப்பெருமான் இங்குச் சுயம்பு வடிவாக எழுந்தருளியிருக்கின்றார், அது எப்படிச் சுயம்பு உருவம் என உறுதிச் செய்யப்பட்டதென்றால் முன்பு திருப்பணிக்காக முருகப்பெருமானை வேறு இடத்துக்கு மாற்ற அந்தச் சிலையினைத் தோண்டியபோது அதன் ஆதாரம் கீழே சென்று […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : திருப்போரூர்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : திருப்போரூர். செங்கல்பட்டு அருகே அமைந்துள்ளது அந்தத் திருப்போரூர். அங்கேதான் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார் முருகப்பெருமான். பொதுவாக முருகப்பெருமான் ஆலயமெல்லாம் மலைமேல் காணப்படும், இவ்வாலயம் அதற்கு விதிவிலக்காக தரையில் அமைந்துள்ளது. இதன் இப்போதைய வரலாறு 400 முதல் 500 வருடங்கள் இருக்கலாம் என்றாலும் அதன் தொன்மை யுகங்களைத் தாண்டியது, அதாவது முருகப்பெருமான் அவதாரக் காலத்தில் இருந்து வருவது. ஆம், முருகப்பெருமான் அசுரரை வதம் செய்ய வந்தபோது தரை, கடல், வான் என மூன்று வழிகளிலும் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரகோட்டம் முருகப்பெருமான் ஆலயம், காஞ்சிபுரம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரகோட்டம் முருகப்பெருமான் ஆலயம், காஞ்சிபுரம். காஞ்சிபுரம் ஒரு புண்ணிய நகரம், காலம் காலமாக காசிபோல, மதுரை போல பெரும் புகழ்பெற்ற ஷேத்திரம். ஒரு காலத்தில் அங்கு ஆயிரம் இந்து தர்ம ஆலயங்கள் இருந்தது. பின்னாளில், சமண பௌத்த குழப்பம், இதர குழப்பங்களில் அவை காணாமல் போனாலும் வெகுசில தொன்மையான ஆலயங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன, அதிலொன்று இந்தக் குமரகோட்டம். இந்த ஆலயத்தின் வரலாறு முருகப்பெருமான் பிரம்மனுக்குத் தண்டனை அளித்த கந்தபுராண நிகழ்வில் இருந்து தொடங்குகின்றது. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications